கரோனா சிகிச்சை அளிக்கும் - மருத்துவமனைகளில் தீத்தடுப்பு விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில், கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு மீட்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அரங்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மேற்கு மண்டல துணை இயக்குநர் கே.சத்திய நாராயணன் தலைமை வகித்து பேசினார்.

அப்போது, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு மீட்புப் பணி மேற்கொள்ள வேண்டும். உயிருக்கு பாதிப்பு இல்லாமல் நோயாளிகளை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், தீயை எப்படி அணைக்க வேண்டும், தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

தீயணைப்புத் துறையின் சார்பில், கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் ஜெகதீஷ் மற்றும் கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்