முன்னாள் குடியரசுத் தலைவர் - அப்துல் கலாமின் மூத்த சகோதரர் மறைவு :

By செய்திப்பிரிவு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேசுவரத்தில் காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர்(103). இவர் ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் பூர்வீக வீட்டில் மகள், மகனுடன் வசித்து வந்தார். இவர் வயது முதிர்வின் காரணமாக நேற்றிரவு வீட்டில் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் தற்போது 2 மகள்கள், ஒரு மகன் மட்டும் உயிரோடு உள்ளனர்.

கலாம் உயிருடன் இருக்கும் போது தனது மூத்த சகோதரரை சந்திக்க ராமேசுவரத்துக்கு அடிக்கடி வந்து செல்வார். தனது அண்ணன் மீது அப்துல் கலாம் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

42 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்