ரூ.25.60 லட்சம் மோசடி செய்தவர் கைது :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி முனியசாமிபுரம் சுடலை காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாரி சசிகுமார் (35). இவருக்குவிருதுநகர் மாவட்டம் சிவகாசிமருதுபாண்டியர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ரமேஷ்குமார் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரமேஷ்குமார் தான் சென்னையில் நிருபராக பணியாற்றி வருவதாகவும், அரசு வேலை வாங்கித்தர முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி மாரி சசிகுமார் தனக்கும், தனது மனைவி மற்றும் சகோதரிக்கு அரசு வேலை வாங்கித் தர வேண்டி ரமேஷ்குமாரிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இதேபோல மாரி சசிகுமாரின் உறவினர்களான முத்துராஜ் என்பவர் ரூ.3.25 லட்சம், முத்துச்சாமி என்பவர் ரூ.3 லட்சம், திருஞானம் என்பவர் ரூ.3.10 லட்சம், துரைமுருகன் என்பவர் ரூ.3.25 லட்சம், அமுதமலர் என்பவர் ரூ.3 லட்சம் என, மொத்தம் ரூ.25.60 லட்சம் அவரிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால், ரமேஷ்குமார் தான் கூறியபடி யாருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. மாரி சசிகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி ஜெயராம் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ரமேஷ்குமார் மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

கருத்துப் பேழை

20 mins ago

இந்தியா

26 mins ago

விளையாட்டு

1 min ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

32 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்