அரசு பள்ளி வகுப்பறையில் - 10 அடி ஆழத்துக்கு பள்ளம் :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே சொரக்காய்பேட்டையில் கொசஸ்தலை ஆற்றின்கரை அருகேஉள்ளஅரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக கடந்த வாரம் பள்ளிச் சுற்றுச் சுவர், நீரேற்றும் அறை ஆகியவை சேதமடைந்தன.

இந்நிலையில் விடுமுறைக்குப் பிறகு நேற்று காலை சொரக்காய்பேட்டை அரசுமேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. அப்போது, பள்ளி கட்டிடத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் திடீரென்று 10 அடிஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து மாணவர்களையும் வெளியேற்றி, பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது.

இதுகுறித்து, தகவலறிந்த கல்வித் துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடம்விரைந்து, பள்ளி வகுப்பறையில் ஏற்பட்டுள்ள பள்ளம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தை விரைவில் சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “மிக விரைவில் சேதமடைந்த பள்ளி வகுப்பறையை சீரமைத்து தருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே, அப்பணி விரைவில் தொடங்கி முடிவுக்கு வரும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

46 mins ago

ஜோதிடம்

50 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

10 hours ago

மேலும்