காருண்யா பல்கலைக்கழகத்தில் ‘பிட் இந்தியா ஃபிரீடம் ரன்' :

By செய்திப்பிரிவு

கோவை: அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வழிகாட்டுதல் படியும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால்தினகரனின் ஆலோசனைப்படியும், ‘பிட் இந்தியா ஃபிரீடம் ரன் 2.0’, காருண்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆரோக்கியம், சோம்பல் களைய, உடல் பருமனை குறைக்க, மனஅழுத்தத்தில் இருந்து விடுபட, பதற்றத்தை குறைக்க பிரதமர் மோடியால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களிலேயே இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதுதவிர, 120 பேராசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் மத்திய அரசின் சான்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வை காருண்யா பல்கலைக்கழக பதிவாளர் எலைஜா பிளசிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குநர் காலேப் ராஜன் செய்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

53 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்