காட்டாத்துறை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் : அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம்காட்டாத்துறையில் கட்டப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்புநிலையம் டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என,அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

காட்டாத்துறை, அழகியபாண்டியபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்கீழ் ரூ.174 கோடிமதிப்பில் இரணியல் பேரூராட்சியில் குடிநீர் திட்டம், பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், காட்டாத்துறை குடிநீர்திட்டம் போன்ற குடிநீர்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டங்களின் மூலம் 374 கிராமங்களைச் சேர்ந்தமக்கள் பயன்பெறுவர். காட்டாத்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. டிசம்பர் மாதம் மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது சுமார்3 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்றார்.

குடிநீர் வடிகால் வாரியசெயற்பொறியாளர் கதிரேசன், உதவி செயற்பொறியாளர்கள் சங்கர், ராஜேந்திரன் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்