தருமபுரியில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில் ஆய்வு :

By செய்திப்பிரிவு

சட்டப்படி உரிமம் இன்றி குழந்தைகள் மையம் நடத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் கூறினார்.

இதுகுறித்து தொடர்பாக அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள பதிவு பெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில், கரோனா காலத்தில் குழந்தைகளின் நிலைமைகளை நேரடியாக ஆய்வு செய்து கண்காணித்து வருகிறோம். அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள, 24 குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை கடந்த, 2 தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கரோனா தொற்றால் மையங்களில் இருந்த பல குழந்தைகள், அவர்களின் பாதுகாவலர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாவலர்கள் இல்லாத 227 குழந்தைகள், மாவட்டத்தில் உள்ள, 11 மையங்களில் பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது. இக்குழந்தைகளின் உடல் நலம் மற்றும் கரோனா தொற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

சட்டப்படி உரிமம் பெறாமல் எந்த ஒரு தனிநபர் அல்லது அமைப்பும் குழந்தை பாதுகாப்பு இல்லங்களையும் நடத்தக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிவகாந்தி, சித்தார்த்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

விளையாட்டு

36 mins ago

இந்தியா

40 mins ago

உலகம்

47 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்