நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரிவசூல் குறைந்துள்ளதால் - அடிப்படை பணிகள் மேற்கொள்வதில் தொய்வு :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரிவசூல் குறைந்துள்ளதால் தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கை, இதர செலவுகள் போக அடிப்படைப் பணிகள் மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஒன்றியங்கள், 359 ஊராட்சிகள், 12 பேரூராட்சிகள், 8 நகராட்சிகள் உள்ளன. அடிப்படை செலவினங்களுக்காக ஆண்டுதோறும் மாநில நிதி நிறுவனம் மூலம்வளர்ச்சிக்கு நிதி வழங்கப்படுகிறது. மேலும், அந்தந்த உள்ளாட்சிகளில் வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் வரி வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளாட்சிகளில் வரிவசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. 30 முதல் 45 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்தியுள்ளனர். இதனால் ஊழியர்கள் சம்பளம், கரோனா பரவல் தடுப்பு பணி, தன்னார்வலர் குழு சம்பளம், வளர்ச்சி பணி முடித்தர்க்கான ஒப்பந்ததாருக்கு வழங்கப்படும் தொகை ஆகிய செலவினங்களுக்கே போதிய நிதியின்றி உள்ளாட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

இதனால் குடிநீர் குழாய் பழுது,சாலை சீரமைப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. ஆகையால் உள்ளாட்சிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க அரசு முன்வர வேண்டும், வரி வசூல் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் ஆகிய கோரிக் கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உள்ளாட்சி நிர்வாகத்துக்கு, சொத்து வரி, தொழில் வரி, வணிக வளாக வாடகை, மார்க்கெட் சுங்கக் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை மூலம் வருவாய் கிடைக்கிறது.

இந்த வருவாயைக் கொண்டு, மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். மேலும், சிறப்பு திட்டங்களுக்கு அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெற்று, செயல்படுத்த வேண்டும். இதையெல்லாம் சரியாகப் பின்பற்றி நிர்வாகத்தை நடத்த வரிவசூல் மிக முக்கியமாகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூலில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை சரியாக பணி செய்யாத காரணமாக வரி வருவாய் பெருமளவில் குறைந்துள்ளது.

பல இடங்களில் புதிய வீடுகளுக்கும், பல்வேறு இனசொத்துகளுக்கும் வரி வசூலிக் கப்படாமல் உள்ளது. வணிக நிறுவனங்களிடம் இருந்து வீடுகளுக்கான வரி அளவை வசூலித்து வருகின்றனர். இவை காரணமாகவே உள்ளாட்சிகளுக்கு உரிய வருவாய் கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அரசு இவற்றை முறைப்படுத்தி வரி வசூல் செய்ய தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

20 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்