ஆம்பூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே அரசு இடத்தில்உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டு, அங்கு குடிநீர் தொட்டி அமைக்கவலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக் கள் கூறும்போது, ‘‘ஆம்பூர் அடுத்த உமராபாத் அருகே பாலூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இது குறித்து தகவலறிந்தபேரணாம்பட்டு வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சென்று, உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றி,அங்கு பொதுமக்களுக்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

54 mins ago

ஜோதிடம்

58 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்