கரோனா தொற்று கண்டறியும் பணி கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார் :

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: கீழத்தஞ்சாவூர் ஊராட்சியில் கரோனா தொற்று கண்டறியும் பணியை கோட்டாட்சியர் நேற்று தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் ஊராட்சியில் கரோனா தொற்றை கண்டறிய வீடு வீடாகச் சென்று, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காய்ச்சல், ஆக்சிஜன் அளவு, சளி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்வதை, நாகை கோட்டாட்சியர் ரா.மணிவேலன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உமா, ஒன்றிய ஆணையர் சரவணன், திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஜய், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி கணேசன், துணைத் தலைவர் நீலாவதி பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்