இறந்தவர்களின் உடமைகள் சாலையில் எரிக்கப்படுவதாக புகார் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மின் மயானம் உள்ளது. கரோனா பரவலுக்கு பின் இறப்பு விகிதம் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டும் முன்பாக தேசிய நெடுஞ்சாலையிலேயே அவரது உடமைகள்,பூ மாலைகள், துணிகள் ஆகியவற்றை கொட்டி எரிக்கின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், அப்பகுதியில் வசிப்போரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "நகர விரிவாக்கத்தின் அடையாளமாக மின் மயானம் வரை வணிக ரீதியிலான கடைகள்,மருத்துவமனைகள் உருவாகியுள்ளன. மின் மயானத்தில் சடலத்தை எரியூட்டும் முன்பாக இடுகாட்டு சடங்கு செய்வது வழக்கமாக உள்ளது. அந்த இடத்தில் சடலத்தை மாற்றி வைத்து, பயன்படுத்திய உடமைகள் எரிக்கப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அல்லது மாற்று வழிகளை கடைபிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்