பேச்சிப்பாறை அணை அடைப்பு :

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன.

கடந்த ஒரு வாரமாக மழை நின்றதால் அணைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிலவிய வெள்ள அபாய நிலை நீங்கியது. நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம் உட்பட மாவட்டம் முழுவதும் சாரல் மழை நேற்று பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் இருந்து 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டிருந்த நிலையில், பேச்சிப்பாறை அணை நேற்று அடைக்கப்பட்டது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 43.06 அடியாக உள்ளது. அணைக்கு 214 கனஅடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 71.28 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 504 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 400 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

முக்கடல் அணை முழு கொள்ளளவான 25 அடி நீர்மட்டத்தில் உள்ள நிலையில், 9 கனஅடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்காக 7.42 கனஅடி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிற்றார் ஒன்றில் 16.89 அடி, சிற்றாறு இரண்டில் 16.99 அடி, பொய்கையில் 26.60 அடி, மாம்பழத்துறையாறில் 54.12 அடி தண்ணீர் உள்ளது. நேற்று பெய்த சாரல் மழையால் குமரி மாவட்டத்தில் மிதமான தட்பவெப்பம் நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

12 hours ago

மேலும்