கெலமங்கலம் ஒன்றியத்தில் - வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றது. இப்பணியின்போது, கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் மேற்பார்வையில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திம்ஜேப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் பணிக்கு ஊராட்சித் தலைவர் ஈஸ்வரி முத்தன் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசமூர்த்தி, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஊராட்சிப் பணியாளர்களுடன் இணைந்து சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஓவ்வொரு வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தொடர்ந்து தொற்று கண்டறியும் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது.

இப்பணியின்போது, அனை வரும் கரோனா பரவலை தடுக்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்