சாத்தனூர் அணையில் 9 மி.மீ., மழை பதிவு :

By செய்திப்பிரிவு

வேலூர்/திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் 9 மி.மீ., மழை பெய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பல இடங்களில் நேற்றும் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால், வெப்பம் சற்று தணிந்தது. விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தி.மலை மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சேத்துப்பட்டு மற்றும் கலசப்பாக்கம் பகுதிகளில் தலா 17.4 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஆரணி பகுதியில் 2, செங்கம் பகுதியில் 11.6, வந்தவாசி பகுதியில் 9, ஜமுனாமரத்தூர் பகுதியில் 4, போளூர் பகுதியில் 6.6, திருவண்ணாமலை பகுதியில் 2.1, தண்டராம்பட்டு பகுதியில் 10.6, கீழ்பென்னாத்தூர் பகுதியில் 2.4, வெம்பாக்கம் பகுதியில் 1 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 7 மி.மீ., மழை பெய்துள்ளது.

119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 82.55 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 470 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 1,727 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 9 மி.மீ., மழை பெய்துள்ளது.

60 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 26.50 அடியாகவும், அணையில் 120.80 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 22.97 அடி உயரம் கொண்ட மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 0.33 அடியாகவும், அணையில் 5.420 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 50.64 அடியாகவும், அணையில் 177.387 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் பரவலான மழை பதிவாகின. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னை பகுதியில் 11.6 மி.மீ மழையும், குடியாத்தம் 3.2, காட்பாடியில் 1.4, மேல் ஆலத்தூரில் 8.2, வேலூரில் 1.7, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 2 மி.மீ மழை பதிவாகியிருந்தன. அதேபோல், நேற்று பிற்பகல் முதல் மாவட்டத்தின் பல இடங்களில் மிதமான மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

21 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்