கடனை திருப்பித் தர மறுத்ததால் பெண்ணை கொலை செய்தேன் : கைதான மைக்செட் ஊழியர் வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

மதுரை வாடிப்பட்டி அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மைக் செட் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மதுரை வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில், கடந்த 27-ம் தேதி செம்மினிப்பட்டி மேம்பாலத்துக்கு கீழே 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடந்தது.

வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். இதில் அவர் சோழவந்தான் அருகிலுள்ள சி.புதூரைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (31) என்பதும், கடந்த 23-ம் தேதி வாடிப்பட்டிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிய வந்தது.

அவரது செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் வாடிப்பட்டி அருகிலுள்ள போடி நாயக்கன்பட்டி மைக் செட் ஊழியர் லட்சுமணன் (40) என்பவருடன், அவர் அடிக்கடி பேசியதும் தெரியவந்தது.

அவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் தமிழ்ச்செல்வியைக் கொலை செய்த தகவல் வெளியானதால் அவரைக் கைதுசெய்தனர்.

அவரது வாக்குமூலம் பற்றி, போலீஸ் தரப்பில் கூறியதாவது:

கணவர் இறந்துவிட்ட நிலை யில், அப்பள வியாபாரம் செய்துவந்த தமிழ்ச்செல்வியுடன் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. தமிழ்ச்செல்வி வீடு கட்ட லட்சுமணன் ரூ. 80 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். தொகையைத் திருப்பிக் கேட்டதற்கு தராமல் இழுத்தடித்தார். கடந்த 23-ம் தேதி ஆண்டிபட்டி பங்களா பகுதியில் கடன் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் தமிழ்ச்செல்வியை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்து பாலத்தின் அடியில் வீசி விட்டுத் தப்பி உள்ளார். லட்சுமணனைக் கைது செய்துள் ளோம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

42 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்