அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், எஸ்.பி வீ.பாஸ்கரன் அலுவலகத்தை தொடங்கி வைத்து பேசியது: பொதுமக்களிடம் கணினி மற்றும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால் அதன் மூலம் பல சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க சைபர் கிரைம் காவல் நிலையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த காவல் நிலையத்தில் ஆன்லைன் பண மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட ஆன்லைன் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம். மேலும், சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

43 mins ago

சுற்றுலா

55 mins ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

23 mins ago

மேலும்