செங்கை மாவட்டத்தில் பதற்றமான - வாக்குச் சாவடிகளை கண்டறியும் பணி : காவல் துறையினருடன் ஆட்சியர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

செங்கை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து கா வல் துறையினருடன் ஆட்சியர் ஜான் லுயிஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப். 6-ல் நடைபெற உள்ள நிலையில் செங்கை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் (தனி), செய்யூர் (தனி) ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடனான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்கள் ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்றன.

இக்கூட்டங்களில் கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் பதற்றமாக இருந்த வாக்குச்சாவடிகள் தற்போது எந்நிலையில் உள்ளன. தொடர்ந்து பதற்றமான நிலையில்தான் உள்ளனவா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டால் அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். ஓரிரு தினங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தரவேண்டும் என காவல் துறைக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தாம்பரம் டி.ரவிச்சந்திரன், ஏ.லதா, சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் அடையார் விக்ரமன், பரங்கிமலை பிரபாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

வணிகம்

33 mins ago

தமிழகம்

44 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்