புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சத இடஒதுக்கீடு கேட்டு மாணவர் காங். போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக் கோரி மாணவர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.

மருத்துவக் கல்வியில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. புதுவையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க புதுவை அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. அமைச்ச ரவை முடிவின் கையெழுத்திட்ட கோப்பு ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பப்பட்டது. அவர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இக் கோப்பை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழகத்தை போல புதுவை யிலும் உள் ஒதுக்கீடை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சி கள், மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு போராட்டங்களும் நடந்து வரு கிறது.

உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்காத ஆளுநரைக் கண்டித்தும், காவலர் தகுதி தேர்வைஉடனடியாக நடத்த வலியுறுத் தியும் புதுவை மாநில மாணவர்காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காராமணிக்குப் பத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்தனர். ஊர்வலம் மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி வழியாக வந்தது. ஊர்வலத்தை போலீஸார் ஆம்பூர் சாலை அருகே தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

தகவலறிந்த முதல்வர் நாராயணசாமி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்தமாணவர்களிடையே பேசிய நாராயணசாமி, "நடப்பு கல்வியாண்டி லேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்துவோம்" என உறுதி யளித்தார்.

தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கி ருந்து கலைந்துசென்றனர்.

நடப்பு கல்வியாண்டி லேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்