முக்கடல் அணையில் போதிய நீர் இருப்பு நாகர்கோவிலுக்கு தட்டுப்பாடு வராது

By செய்திப்பிரிவு

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்கும் வகையில் போதிய நீர் இருப்பு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டம்முழுவதும் உள்ள குளங்கள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கும்பப்பூ நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 44.07 அடியாக உயர்ந்துள்ளது. 756 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70.25 அடியாக உள்ளது. 397 கனஅடி தண்ணீர் வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் தற்போது 22.10 அடியாக உள்ளது.

இதனால், இன்னும் 3 மாதங்களுக்கு மேல் முக்கடலில் இருந்து தட்டுப்பாடின்றி நாகர்கோவில் மாநகர்ப்பகுதிக்கு தண்ணீர் வழங்கலாம். மேலும், ஒரு மாதம் மழைநீடிக்க வாய்ப்பிருப்பதால், கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத சூழல் நிலவுகிறது.

முக்கடல் அணையில் நீர் இருப்பையும், அங்குள்ள அறிவியல் பூங்கா மற்றும் சுற்றுப்புற பகுதிகளையும் மாவட்ட ஆட்சியர்அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார்.மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

க்ரைம்

22 mins ago

சுற்றுச்சூழல்

58 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்