கப்பல் மோதி மூழ்கிய - படகின் உரிமையாளருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு :

By செய்திப்பிரிவு

சென்னை காசிமேடு பவர் குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது படகில் லோகநாதன், அஜித், ரஞ்சித், மணி உள்ளிட்ட 7 மீனவர்கள் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 18-ம் தேதி அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர். எண்ணூர் துறைமுகம் தாண்டி சென்று கொண்டிருந்தபோது, விசைப்படகில் பழுது ஏற்பட்டதால், படகை நிறுத்தி மீனவர்கள் சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது `வரதா' என்ற சரக்கு கப்பல் இந்தப் படகின் மீது மோதியது. இதில், படகு உடைந்து, கடலில் மூழ்கிவிட்டது. உயிருக்குப் போராடி கொண்டிருந்த மீனவர்களை, சக மீனவர்கள் மீட்டு வந்தனர்.

இதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரூ.30 லட்சம் இழப்பீடாக பெற்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கப்பல் மோதியதால் மூழ்கிய படகின் உரிமையாளருக்கு ரூ.30 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்