திறன் மேம்பாட்டு மையங்களை : உருவாக்க கொடிசியா கோரிக்கை :

By செய்திப்பிரிவு

கோவை: தமிழகத்தில் தொழிலாளர் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடிசியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு வெளியிட்ட அறிக்கையில், “கரோனா தொற்று பாதிப்பானது, தமிழகம் வெளிமாநில தொழிலாளர்களை பிரதானமாக நம்பியுள்ள மாநிலம் என்பதை தெளிவாக காட்டியுள்ளது. குறிப்பாக, வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை நம்பியுள்ளோம். வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றால், நமது தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பாதிப்பை சந்திக்கும் நிலைக்கு வந்து விட்டன. இந்நிலை தொடராமல், தற்போதைய சூழலில் உள்மாநிலத்துக்குள் தொழிலாளர் ஆற்றல் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான அம்சங்களை கண்டறிந்து அமல்படுத்துவது அவசியமானதாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் போதிய திறனுடைய தொழிலாளர்களை உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்