ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் : ‘பறக்கும் நூல்கள்’ திட்டம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சேலம்: காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ‘பறக்கும் நூல்கள்’ திட்டம் தொடங்கப்பட்டது.

சேலம் அடுத்த உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் ஆலோசனைப்படி, ‘பறக்கும் நூல்கள்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் உலகளாவிய கல்வி சிந்தனையாளர்கள் மற்றும் இந்திய கல்வி சிந்தனையாளர்களின் நூல்கள் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு ஒவ்வொரு புத்தகம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட புத்தகத்தை வாசித்த பின்னர் அதனை தங்களிடையே சுழற்சி முறையில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இத்திட்டத்தின் தாக்கம் தொடர்பாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன நூலகர் சச்சிதானந்தம் ஆய்வு செய்து இத்திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியப் பள்ளிகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்