பின்னலூர் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கடலூர்: புவனகிரி வட்டத்திற்கு உட்பட்ட பின்னலூர் பகுதியில் உள்ள வீரநாராயணன் உழவர் உற்பத்தி நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கினை கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது:

தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு நிதியுதவி மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணித்துறை வழிகாட்டுதலில் படி வீரநாராயணன் உழவர் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த 1,006 சிறு ,குறு விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் இடுபொருட்கள் விற்பனை மையம் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து நெல் கொள்முதல் மற்றும் நேரடி விற்பனை மற்றும் நெல்,உளுந்து விதை உற்பத்தி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டம் வரதராஜன்பேட்டை பகுதியில் 60 உறுப்பினர்களை கொண்டு இயங்கி வரும் குறிஞ்சிப்பாடி உழவர் உற்பத்தியாளர் குழுவின் செயல்பாடுகள் குறித்து குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இக்குழுவின் உறுப்பினர்களுக்கு பேட்டரி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

2 mins ago

சினிமா

13 mins ago

சினிமா

16 mins ago

வலைஞர் பக்கம்

20 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

38 mins ago

க்ரைம்

35 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்