மின்சார ரயில்களில் - பொதுமக்களும் பயணிக்க அனுமதிக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக தற்போது இயக்கப்பட்டு வரும் புறநகர் சிறப்பு மின்சார ரயில்களில் அரசு ஊழியர்கள், அத்தியாவசியத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள், பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர் எஸ்டேட், கிண்டி தொழிற்பேட்டை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஏராளமானோர் புறநகர் ரயில் போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.

கரோனா ஊரடங்குக்கு முன்பு, தனியார் நிறுவன ஊழியர்கள் அவர்களது நிறுவனத்தில் இருந்து கடிதம் வாங்கி வந்தால், ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோல, கடிதம் வாங்கி வரும் ஊழியர்களை ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். பெண்கள் மற்றும் பொதுமக்களையும் படிப்படியாக ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்