இளையோருக்கே அதிகளவில் கரோனா : தடுப்பூசி போடுவது அவசியம் என சுகாதாரச் செயலர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் கரோனா இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி. தற்போது குறைந்து வரும் நிலையில், மருத்துவ வல்லுநர்கள் மூலம் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை செய்திகளும் வந்து கொண்டு இருக்கின்றன.

கடந்த இரண்டு அலைகளிலும் நோய் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளை யோர்களே.

ஆனாலும், அவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவாகவே காணப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு, குறிப்பாக வயோதிகர்களுக்கு நோய் தொற்று ஏற்படும்போது நோயின் தீவிரம் அதிகரித்து, உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அதனால் 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் தடுப்பூசி திருவிழாவில் இளையோர் கலந்து கொண்டு, அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மூன்றாம் அலையின் தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும்.

இதன் மூலம் மறைமுகமாக குழந்தைகளுக்குத் தொற்று வராமல் நம்மால் பெருமளவு தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்துவதற்கான முன்னேற் பாடுகள் பற்றி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அனைத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள், நோடல் மற்றும் மண்டல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த தடுப்பூசி திருவிழாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 min ago

விளையாட்டு

17 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

28 mins ago

இந்தியா

41 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்