விழுப்புரம் மாவட்டத்தில் 5 நாட்களுக்குப் : பிறகு கரோனா தடுப்பூசி போடப்படும் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இன்று (ஜூன் 9) முதல் 13-ம் தேதிக்குள் தமிழகத்திற்கு 7 லட்சம் தடுப்பூசி வர வேண்டியுள்ளது. தற்போது சுமார் 30 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது” என்றார்.

இதற்கிடையே நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

மிக குறைந்த அளவே தடுப்பூசி உள்ளதால் முதியவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டதாகவும், இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தடுப்பூசி வந்துவிடும், பின்பு வழக்கம்போல் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

18 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

12 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

26 mins ago

வலைஞர் பக்கம்

30 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

48 mins ago

க்ரைம்

45 mins ago

மேலும்