கரோனா தொற்று தடுப்புப் பணிகளை - சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பு சிறப்பு அலுவலர்களாக எம்.ஏ.சித்திக், வீரராகவ ராவ் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட ரத்தினபுரி, ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ் பார்வையிட்டார். அப்போது, களப்பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

இதேபோல, கிழக்கு மண்டலம் 36-வது வார்டு அழகு நகர், விமான நிலைய சாலைப் பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடுகள்தோறும் மேற்கொண்ட சளி, காய்ச்சல் பரிசோதனை செய்தல், கிருமிநாசினி தெளிப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி உதவி ஆணையர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்