முதுநிலை மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் : கோவை அரசு மருத்துவமனை டீன் உறுதி

By செய்திப்பிரிவு

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள், அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் அனுமதிக்கப் படுபவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவர்களுக்கு முறையான உணவு, பணி முடிந்ததும் தனிமைப்படுத்துவதற்கு அறை உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்க வில்லை என்று கூறி மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக டீன் நிர்மலா கூறும்போது, “கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுவோருக்கு இன்றுமுதல் உணவு வழங்கப்படும்.

அதேபோல, சிகிச்சை அளித் தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தனி இடம் ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நோயாளிகளுக்கு ஊசிபோடும் பணி, அறிக்கை தயார் செய்வது, மருந்துகள் அளிப்பது போன்றவற்றைசெவிலியர்கள் கவனித்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள் ளது. முதுநிலை மருத்துவ மாணவர் களுக்கான தொகுப்பூதியம் 3 நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்