திருவெள்ளறை கோயில் தேரோட்ட நேரம் மாற்றம் :

By செய்திப்பிரிவு

திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலின் சார்பு கோயிலான திருவெள்ளறை கிராமத்தில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோயில் தேரோட்டம் ஏப்.6-ம் தேதி காலை 6 மணியளவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அன்றைய தினம் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேரோடும் வீதிக்கு தென்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 வாக்குச்சாவடிகள் உள்ளதால் தேரோட்ட நேரத்தை மாற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

அதன்படி, லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமையில் கிராம பட்டையதாரர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தேர் திருவிழா நடைபெறும் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அதிகாலை 2.30 மணிக்கு மேல் 3.40 மணிக்குள் பெருமாள் புறப்பாடு தொடங்கி, அதிகாலை 4 மணிக்கு முன்னதாக தேர் வடம் பிடிக்கப்பட்டு காலை 6 மணிக்கு முன்னதாக தேரை நிலை நிறுத்துவது எனவும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

வர்த்தக உலகம்

37 mins ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

58 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்