புதுச்சேரி மாநிலத்தில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கரோனா தொற் றால் 38,611 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அனுப்பிய ‘கோவிஷீல்டு’ என்ற கரோனா தடுப்பூசி கடந்த 13-ம் தேதி புதுச்சேரிக்கு வந்தது. ஒரு பாட்டிலுக்கு 10 டோஸ் வீதம் 1,750 பாட்டில்களில் 17,500 டோஸ் மருந்து வந்துள்ளது.

முதல்கட்டமாக மத்திய அரசு நிறுவன ஊழியர்கள் 9 ஆயிரம் பேர் உட்பட 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. செவ் வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல்மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் தினம் ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி போடப் படுகிறது.

புதுச்சேரியில் ஜிப்மர், இந்திராகாந்தி அரசு பொது மருத்துவ மனை, ராஜீவ்காந்தி அரசு மகளிர்மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் இந்திராகாந்திஅரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்காலில் அரசு பொது மருத்துவ மனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை ஆகிய 8 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி நேற்று தொடங்கிவைத்தார். முனுசாமி என்ற மருத் துவ பணியாளர் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் முதல்கட் டமாக மருத்துவப் பணியாளர்கள் 24 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒருமையத்தில் 100 பேருக்கு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

மாநிலம் முழுவதும் மொத் தம் 147 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போட மாநில அரசு தயாராக இருக்கிறது. ஆகவே மத்திய அரசானது அதற்கான மருந்தை விநியோகம் செய்யமுடியுமா? அப்படி இல்லையென் றால் மாநில அரசே எங்கள் நிதியில்இருந்து புதுச்சேரி மாநில மக்கள்அனைவருக்கும் தடுப்பூசி போடுவ தற்கு நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தினமும் ஒரு மையத்தில் 100 பேர் வீதம் 800 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று புதுச்சேரியில் 5 மையங்களில் 150, காரைக்காலில் 15, மாஹேவில் 79, ஏனாமில் 30 என 274 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இதில் மாஹேவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு, பின்னர் சரியானது என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

30 mins ago

ஜோதிடம்

37 mins ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்