இந்திரா காந்தி கல்லூரி சார்பில் திருவெள்ளறையில் தூய்மைப் பொங்கல்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மதி இந்திரா காந்தி கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம், ஸ்கோப் நிறுவனம் இணைந்து திருவெள்ளறை கிராமத்தில் தூய்மைப் பொங்கல் விழாவை நேற்று கொண்டாடின.

விழாவுக்கு, திருவெள்ளறை ஊராட்சிமன்றத் தலைவர் லதா கதிர்வேலு தலைமை வகித்தார். கல்லூரி தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன், பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் லட்சுமி பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி கோலப் போட்டி, தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கிராம பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா, போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி, கழிப்பறைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம், மாதவிடாய் சுகாதாரம் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். விழாவில், தூய்மையின் சிறப்பு குறித்து கே.மீனா எழுதிய விழிப்புணர்வு கையேடு கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக ஸ்கோப் நிறுவன நிர்வாக இயக்குநர் சுப்புராமன் வரவேற்றார். நிறைவாக ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

வாழ்வியல்

12 mins ago

தமிழகம்

28 mins ago

கருத்துப் பேழை

50 mins ago

விளையாட்டு

54 mins ago

இந்தியா

58 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்