அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம்

By செய்திப்பிரிவு

வேலூர்: அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்பட்டு கணக்கு காலாவதியாகிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மத்திய அரசின் உத்தரவுப்படி அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 என்றளவில் வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், புதிய விதிகளின்படி வரும் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 வீதம் சேமிப்பு கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு கணக்கு காலாவதியாகிவிடும். எனவே, குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் உயர்த்திக்கொள்ள வரும் டிசம்பர் 11-ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500-ஆக உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்