ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கனமழையால் வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகள்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் அவ்வப்போது பெய்த கனமழை யால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

குமரிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. மேலும், மாலத்தீவு முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை அவ்வப்போது கனமழை பெய்தது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காட்பாடி, பொன்னை, வேலூர், சேவூர் மற்றும் குடியாத்தம் பகுதிகளில் பரவலான மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, அம்மூர், காவேரிப்பாக்கம் மற்றும் சோளிங்கர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஆலங்காயம், வடப்புதுப்பட்டு, வாணி யம்பாடி, நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கனமழை யால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆம்பூர் பகுதியையொட்டியுள்ள வனப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஆம்பூர் அடுத்த கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆணைமடுகு தடுப்பணை நேற்று நிரம்பி யது. இதேபோல், வனப்பகுதியை யொட்டியுள்ள தடுப்பணைகள் நிரம்பிவருகின்றன. தொடர் மழையால்விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச் சியடைந்துள்ளனர். நேற்று காலை நில வரப்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பதி வான மழையளவு விவரம் வருமாறு:

திருப்பத்தூர் மாவட்டம்

ஆலங்காயம் 18 மி.மீ., ஆம்பூர் 12, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை 20.8, நாட்றாம்பள்ளி 12, திருப் பத்தூர் 12.1, வாணியம்பாடி 29.3 என சராசரியாக 16.1 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.

ராணிப்பேட்டை மாவட்டம்

அரக்கோணம் 9.8 மி.மீ., ஆற்காடு 35.5, காவேரிப்பாக்கம் 15, சோளிங்கர் 19, வாலாஜா 26, அம்மூர் 13.4, கலவை 11.2 என மாவட்டம் முழுவதும் சராசரியாக 31.4 மி.மீட்டர் அளவுக்கு மழையளவு பதிவாகியிருந்தன.

வேலூர் மாவட்டம்

குடியாத்தம் 8.6 மி.மீ., காட்பாடி 10.6, மேல் ஆலத்தூர் 10.2, பொன்னை 26, வேலூர் 8.9 என சராசரியாக 12.08 மி.மீட்டர் அளவுக்கு மழையளவு பதிவாகியிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

24 mins ago

க்ரைம்

28 mins ago

இந்தியா

26 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்