கர்நாடகாவில் மேலும் 72 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு: கல்லூரிகள் மூடல் :

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் தார்வாட் மருத்துவக் கல்லூரி, மைசூரு நர்சிங் கல்லூரி, பெங்களூருவில் நர்சிங் கல்லூரி, சர்வதேச உறைவிட பள்ளி, ஹாசன் உறைவிடப் பள்ளி ஆகியவற்றில் படிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் மைசூருவில் உள்ள காவேரி நர்சிங் கல்லூரியில் படிக்கும் 43 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மைசூருவில் உள்ள செயின்ட் ஜோசப் நர்சிங் கல்லூரியில் பயிலும் 29 மாணவிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த 150 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மைசூரு மாவட்ட ஆட்சியர் பகடி கவுதன் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இரு நர்சிங் கல்லூரிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கல்லூரி மற்றும் விடுதிகளை இரு வாரங்களுக்கு மூட உத்தரவிட்டார். பின்னர் மைசூரு மாவட்ட ஆட்சியர் பகடி கவுதன் கூறும்போது, “இரு கல்லூரிகளிலும் இதுவரை 72 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். எனவே அவர்களுக்கு தொற்றின் பாதிப்பு குறைவாகவே உள்ளது.

தற்போது தொற்றுக்கு ஆளாகியுள்ள 40 சதவீத மாணவர்கள் கேரளாவில் இருந்து கல்லூரிக்கு திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

வணிகம்

39 mins ago

தமிழகம்

50 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்