ஒரே நாளில் 30,773 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் ஒரே நாளில் 30,773 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சராசரியாக நாள்தோறும் 30,000 முதல் 40,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் 35,662 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி ஒரே நாளில் 30,773 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

ஒரே நாளில் 38,945 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 3.26 கோடி பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலையில் 3.34 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 309 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4.44 லட்சமாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் மிக அதிகபட்சமாக 19,325 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் 3,391 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, மிசோரமில் 1,000 முதல் 1,500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர மாநிலங்களில் வைரஸ் பரவல் குறைவாக உள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

59 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்