நாட்டில் 230 பேருக்கு மத்திய படைகள் பாதுகாப்பு : மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தகவல்

By செய்திப்பிரிவு

மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி பதிலளித்து கூறியதாவது:

எந்தெந்த நபர்களுக்கு விஐபி பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டுமோ அவர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசிடம் மாநிலஅரசுகள் சமர்ப்பிக்கும். அதன்படி, குறிப்பிட்ட நபர்களின் அந்தஸ்து, உண்மையிலேயே அவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்பதை மத்திய பாதுகாப்புப் படை ஆய்வு செய்யும். அதன் பின்னரே, அவர்களுக்கு சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் படைகளின் பாதுகாப்பு வழங்கப்படும்.

ஒய், ஒய் பிளஸ், இசட், இசட் பிளஸ் என எந்த வகை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அது மட்டுமின்றி, பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமா அல்லது மாற்றியமைக்க வேண்டுமா என்பதுகுறித்தும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் பரிசீலிக்கப்படும். தற்போது 230 பேருக்கு மத்தியபடைகள் பாதுகாப்பு வழங்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

54 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்