மத்திய அரசின் பிடிவாதத்தால்உணவுப் பற்றாக்குறை ஏற்படும் மேற்கு வங்க முதல்வர் மம்தா எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதத்தைக் கைவிடவில்லை என்றால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இப்போது நாட்டில் உணவுப் பற்றாக்குறை தொடங்கி உள்ளது. வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் உணப்பொருள் பற்றாக்குறை ஏற்படும். விவசாயிகள் நம் நாட்டின் சொத்து. எனவே அவர்களுடைய நலனுக்கு எதிராக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அவர்கள் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

பாஜக நம் நாட்டின் மிகப்பெரிய குப்பைத்தொட்டி கட்சியாகிவிட்டது. இந்தத் தொட்டி பிற கட்சிகளைச் சேர்ந்த ஊழல் தலைவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. பாஜகவுக்கு தாவிய சில தலைவர்களின் (திரிணமூல் காங்கிரஸ்) பின்னணியைப் பார்த்தால் இது புரியும். பொதுமக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்கவே அவர்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

36 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்