26 நாட்களுக்குப் பின் - நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் கீழே குறைந்தது : ஒரே நாளில் 4,106 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் கீழே குறைந்தது. 26 நாட்களுக்குப் பின் தொற்று பாதிப்பு 3 லட்சத்துக்கும் குறைவாக பதிவாவது இதுவே முதல்முறை.

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரு கின்றன. பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந் துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி யில் இருந்து நாடு முழுவதும் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட் சத்து 81 ஆயிரத்து 386 ஆக குறைந்தது. 26 நாட்களுக்குப் பின் கரோனாவின் பாதிப்பு 3 லட்சத்துக்கும் கீழே பதிவாகியுள்ளது.

அதே நேரம், கரோனாவால் உயிரிழந் தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 4,106 பேர் இறந்துள்ளனர். இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக உள்ளது. ஒரே நாளில் 3 லட்சத்து 78 ஆயிரத்து 741 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 84.81 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் நாடு முழுவதும் 15 லட்சத்து 73 ஆயிரத்து 515 மாதிரிகள் பரிசோதிக் கப்பட்டுள்ளன. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

11 hours ago

மேலும்