தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரிக்கு கரோனா

By செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத் தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7.90 லட்சத்தை கடந்துள்ளது. இளைஞர்கள் உட்பட 11,793 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவருக்கு கடந்த 4-ம் தேதி காய்ச்சல் இருந்ததால், சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். மறுநாள் வந்த பரிசோதனை முடிவில் இவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, உடனே மியாட் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவருக்கு மருத்துவர் கள் சிகிச்சை அளித்து வருகின்ற னர். மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள் ளது. அவருக்கு சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளது. அவர் நல முடன் இருக்கிறார்’’ என்றனர்.

இதனிடையே சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமி ழகத்தில் நேற்று ஆண்கள் 799, பெண்கள் 521 என மொத்தம் 1,320 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண் ணிக்கை 7 லட்சத்து 90,240 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 17,542 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2 லட்சத்து 10,410 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 67,659 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 10,788 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1 கோடியே 24 லட்சத்து 76,093 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 5 பேர், தனியார் மருத்துவமனைகளில் 11 பேர் என நேற்று 16 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 4 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 11,793 ஆக உயர்ந்துள்ளது. சென்னை யில் மட்டும் 3,875 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை 12 வயதுக்கு உட்பட்டவர் கள் 27,935 பேரும் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் 6 லட்சத்து 60,154 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டோர் 1 லட்சத்து 2,151 பேரும் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்