டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை - ஸ்காட்லாந்துக்கு 2-வது வெற்றி :

By செய்திப்பிரிவு

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதற்கட்ட சுற்றில் ஸ்காட்லாந்து அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது.

ஓமனில் அல் அமரத்தில் நேற்றுநடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிச்சி பெரிங்டன் 70 ரன்களும், மேத்யூ கிராஸ் 45 ரன்களும் விளாசினர். பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மோரியா 4, சாட்சோபர் 3 விக்கெட்களை வீழ்த்தி னர்.

166 ரன்கள் இலக்குடன் பேட்செய்த பப்புவா நியூ கினியா 19.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக நார்மன்வானுவா 47 ரன்களும், சிசி பா 24ரன்களும் எடுத்தனர். ஸ்காட்லாந்துசார்பில் ஜோஸ் டேவி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து, தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் 4புள்ளிகளுடன் பிரதான சுற்றுக்குமுன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.

பயிற்சி ஆட்டம்....

டி20 உலகக் கோப்பை தொடரில்சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை தோற்கடித்திருந்தது. இந்நிலையில் இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 3.30மணிக்கு துபாயில் நடக்கிறது.

நமீபியா - நெதர்லாந்து

இடம்: அபுதாபி

நேரம்: பிற்பகல் 3.30

அயர்லாந்து - இலங்கை

இடம்: அபுதாபி

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

விளையாட்டு

27 mins ago

க்ரைம்

31 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்