ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் - டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா அணி :

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

128 ரன்கள் இலக்கு

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது கொல்கத்தா அணி. சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், லூக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பந்த் ஆகியோர் தலா 39 ரன்களும், ஷிகர் தவண் 24 ரன்களும் எடுத்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 1, ஷிம்ரன் ஹெட்மயர் 4, லலித் யாதவ் 0, அக்ஸர் படேல் 0, அஸ்வின் 9, அவேஷ்கான் 5 ரன்களில் நடையைக் கட்டினர்.

128 ரன்கள் இலக்குடன் பேட்செய்த கொல்கத்தா அணி 18.2ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப் புக்கு 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷுப்மன்கில் 30, நிதிஷ் ராணா 36, சுனில் நரேன் 21, தினேஷ் கார்த்திக் 12, வெங்கடேஷ் ஐயர் 14, ராகுல் திரிபாதி 9 ரன்கள் சேர்த்தனர்.

புள்ளி பட்டியலில் 4-வது இடம்

கொல்கத்தா அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் சேர்த்து, பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்கிறது.

ராஜஸ்தான் - பெங்களூரு

இடம்: துபாய்

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

வணிகம்

30 mins ago

தமிழகம்

41 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்