கிராம பஞ்சாயத்துகளில் - சிசிடிவி பொருத்தக் கோரி வழக்கு : தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில்அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள கிராமபஞ்சாயத்துகளில் பட்டியலின சமூகத் தலைவர்கள் சாதிய பாகுபாட்டுடன் நடத்தப்படுகி்ன்றனர். கடந்த1997-ம் ஆண்டு முதல் 6 பஞ்சாயத்துதலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பட்டியலின தலைவர்களை தேசியக்கொடியை ஏற்றுவதற்கு கூட அனுமதிப்பதில்லை. பெண் பஞ்சாயத்து தலைவர்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

51 mins ago

க்ரைம்

55 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்