வருமானவரித் துறை சோதனையில் - இதுவரை ரூ.100 கோடி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

தேர்தலை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி ரொக்கம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

300-க்கும் மேற்பட்ட புகார்கள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, சட்டவிரோதமாக பணம், பொருட்கள் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை கடந்த மார்ச் 1-ம் தேதி திறக்கப்பட்டது. இதில், சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. அவற்றில் நம்பத்தகுந்த புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. அதில் ரூ.77 கோடி ரொக்கம், ரூ.23 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலைவிட ரூ.65 கோடியும், 2019 மக்களவை தேர்தலைவிட ரூ.19 கோடியும் அதிகம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

விளையாட்டு

46 mins ago

க்ரைம்

50 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்