ஜூனியர் மல்யுத்த வீரர் கொலை வழக்கில் - சுஷில் குமார் உள்ளிட்ட 13 பேர் மீது 1,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் :

By செய்திப்பிரிவு

ஜூனியர் மல்யுத்த வீரரை கொலை செய்த வழக்கில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான சுஷில் குமார் உள்ளிட்ட 13 பேர் மீது 1,000 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் கடந்த மே 4-ம் தேதி நள்ளிரவு நடந்த மோதலின்போது ஜூனியர் மல்யுத்த மல்யுத்த சாம்பியனான சாகர் தன்கர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற சுஷில் குமார் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் குற்றத்தின் பின்னணியை விவரித்து 1,000 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று டெல்லி தலைமை பெருநகர நீதிமன்றத்தில் குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இதில் சுஷில் குமார் உள்ளிட்ட 13 பேர் இடம் பெற்றிருந்தனர்.

காவல்துறையினர் கூறும்போது, சுஷில் குமாரின் மனைவிக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டில் சாகர் தன்கர் வாடகைக்கு இருந்துள்ளார். இங்கு மல்யுத்தத்துடன் தொடர்பில்லாத பலர் வந்து சென்றுள்ளனர். இதை சுஷில் குமார் விரும்பவில்லை. இதையடுத்து வீட்டை காலி செய்வது தொடர்பாக பிரச்சினை எழுந்தது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக வீரர்கள் மத்தியில் ஆசிரியராக மதிக்கப்பட்ட சுஷில்குமார் சாகர் தன்கர் தரப்பினரால் அவமதிக்கப்பட்டுள்ளார். இதனால் வருத்தமடைந்த சுஷில் குமார், சாகர் தன்கருக்கு பாடம் கற்பிக்க விரும்பியுள்ளார்.

மேலும் சாகர் தன்கருக்கு ஆதரவாக சுஷில் குமாருடன் டெல்லி கேங்ஸ்டர் கலா ஜாதேடியின் மருமகன் சோனு மஹால் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் சுஷில் குமாருக்கும், சாகர் தன்கருக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அசிங்கமான வாதங்களால் சோனுவும், சாகரும் சுஷில் குமாரை அவமதிப்பு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்தே சாகர் தன்கர், சோனு மஹாலை தனது நண்பர்கள் உதவியுடன் மே 4ம் தேதி இரவில் சத்ரசல் ஸ்டேடியத்துக்கு கடத்திச் சென்றுள்ளார் சுஷில் குமார். அங்கு சாகர் தன்கர், சோனுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது சோனு மட்டும் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

சுஷிலும் அவரது உதவியாளர்களும் காவல்துறையினர் மைதானத்தை அடைந்துவிட்டதை உணர்ந்ததும், அவர்கள் சாகரையும் மற்றொரு நண்பரையும் மைதானத்தின் அடித்தளத்தில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த சாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்” என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

வேலை வாய்ப்பு

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்