கரோனா 2-வது அலை பரவலுக்கு 420 மருத்துவர்கள் உயிரிழப்பு : இந்திய மருத்துவ சங்கம் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலை பரவலுக்கு நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந் துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் கரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது. அதன் பிறகு தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினசரி பாதிப்பு புதிய உச்சமாக 4 லட்சத்தைத் தாண்டியது. அதன் பிறகு சற்று குறையத் தொடங்கி உள்ளது.

கரோனா தொற்றால் உயிரி ழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 2.95 லட்சம் பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்களும் அடங்குவர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “கரோனா 2-வது அலை பரவல் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 100 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். பிஹாரில் 96, உத்தரபிரதேசத்தில் 41, குஜராத்தில் 31, தெலங் கானாவில் 20, மேற்கு வங்கம்மற்றும் ஒடிசாவில் தலா 16, மகாராஷ்டிராவில் 15 மருத்துவர்கள் உயிரிழந் துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்