இந்தியாவில் அறிமுகமானது விவோ T1 புரோ 5ஜி மற்றும் T1 44W ஸ்மார்ட்போன் | விலை & சிறப்பு அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்திய சந்தையில் விவோ T1 புரோ 5ஜி மற்றும் T1 44 வாட்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோவின் பிரதான சந்தைகளில் ஒன்றாக அமைந்துள்ளது இந்தியா. பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்தை தங்களது லேட்டஸ்ட் போன்கள் மூலம் வழங்கி வருகிறது விவோ. அதன் காரணமாக சர்வதேச அளவில் போன்களை விற்பனை செய்து வரும் முன்னணி பிராண்டாகவும் விவோ திகழ்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவில் T சீரிஸ் வரிசையில் இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது விவோ. இதனை விவோ இந்தியா இயக்குனர் பங்கஜ் காந்தி தெரிவித்துள்ளார்.

T1 புரோ 5ஜி சிறப்பு அம்சங்கள்:

6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. இரண்டிலும் இன்டர்னல் ஸ்டோரேஜ் அளவு 128ஜிபி என உள்ளது. வரும் 7-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 23,999 மற்றும் 24,999 ரூபாயாக உள்ளது. 5ஜி சப்போர்ட்டில் இந்த போன் வெளிவந்துள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

விவோ T1 44 வாட்ஸ் சிறப்பு அம்சங்கள்:

விவோ T1 புரோ 5ஜி போனுடன் ஒப்பிடும்போது இதன் இயங்குதளம், டிஸ்பிளே போன்றவை மாறவில்லை. அதே நேரத்தில் புராசஸர், கேமரா லென்ஸ் பிக்சல், பேட்டரி போன்றவை மாறியுள்ளது.

4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி என மூன்று வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. மூன்றிலும் இன்டர்னல் ஸ்டோரேஜ் அளவு 128ஜிபி என உள்ளது. வரும் 8-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 14,499, 15,999 மற்றும் 17,999 என மூன்று விலைகளில் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு போன்களுக்கும் விலையில் அறிமுக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

19 mins ago

விளையாட்டு

21 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

12 mins ago

விளையாட்டு

28 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

39 mins ago

இந்தியா

52 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்