காளான் வடிவ எல்.ஈ.டி விளக்குடன் 5 யுஎஸ்பி சார்ஜர்

By செய்திப்பிரிவு

காளான் வடிவத்தில் எல்.ஈ.டி விளக்குடன், ஒரே நேரத்தில் 5 சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி உடைய புதிய கருவியை ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

'ZEB-5CSLU3' என்று பெயரிடப்பட்டுள்ள இதுல் போர்ட் டாக்கிங் (port docking) ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்தும் வகையில் இருக்க இது உதவுகிறது. காளான் வடிவ LED விளக்கு படுக்கை அறை விளக்கு போல எளிதாகத் தோற்றமளிக்கும்.

போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்துவிட்டால், உடனே சாதனத்தை இந்த 5 போர்ட் டாக்கிங் ஹப்பில் வைத்துவிட்டால் துரிதமாக சார்ஜ் ஏறத் துவங்கும்.

5 USB போர்ட்டுகளுடன் வரும் இந்த சார்ஜிங் டாக் துரிதமான சார்ஜிங்கிற்காக ஸ்மார்டர் IC உடன் வருகிறது. அவற்றில் 1-4 வரை 5v ஆதரவும் போர்ட் 5 துரித சார்ஜுக்கான 12v/9v/5v ஆதரவும் கொண்டது. இந்த டாக்கிங் ஸ்டேஷனின் அதிகபட்ச வெளியீடு 6A ஆகும்.

இதில் இருக்கும் பிரித்து எடுக்கக் கூடிய காளான் வடிய LED விளக்கை அதில் இருக்கும் ஆன்/ ஆஃப் சுவிட்சுகளைப் பயன்படுத்தி பயன்படுத்த முடியும். மேலும் இதில் அனைத்து மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை வைப்பதற்கான ஹோல்டரும் இருக்கிறது.

இதன் விலை ரூ. 3,495

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

15 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

9 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

23 mins ago

வலைஞர் பக்கம்

27 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

45 mins ago

க்ரைம்

42 mins ago

இந்தியா

48 mins ago

மேலும்