ஆப்பிள் ஐ-போன் 6 செப்டம்பர் 9-ல் அறிமுகம்

By செய்திப்பிரிவு

மின்னணு சாதன உற்பத்தியில் மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட ஐபோன் மாடலான ஐபோன் -6-ஐ அடுத்த மாதம் 9-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் உள்ள கலிபோர்னியா மாகா ணத்தில் கூபர்டினோவில் இது அறிமுகமாகிறது.

இந்நிறுவனத்தின் ஐ-பாட் மற்றும் ஐ-பேட் ஆகியன மிகவும் பிரபலமானவை. கருப்பு முகப்பு மற்றும் வெள்ளை நிறம் பின்பகுதியைக் கொண்டதாக இவை வெளி வருகின்றன. நிறுவனத்தின் லோகோ பின்புறம் இடம்பெற்றிருக்கும்.

2007-ம் ஆண்டு முதல் ஐ-போன் மற்றும் ஐ-பாட்களை இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் மேக் கம்ப்யூட்டரை இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் அறிமுகப்படுத்தியிருந்தார். இதேபோல இப்போது ஆண்டு தோறும் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்துவதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

புதிதாக அறிமுகமாகும் ஐ-போன் 6, இரண்டு மாடல்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. முதலாவது மாடல் 4.7 அங்குல திரை கொண்டதாகவும், அடுத்தது 5.5 அங்குல திரை கொண்டதாகவும் வெளிவரும் என தெரிகிறது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் சாம்சங் நிறுவனத்துக்குப் போட்டியாக ஆப்பிள் ஐபோன் வெளி வர உள்ளது.

ஆப்பிள் ஸ்மார்ட்வா ட்சையும் அப்போது அறிமுகப்ப டுத்தக்கூடும் என தெரிகிறது. இதற்கு ஐ-வாட்ச் என்ற பெயரில் பல நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

க்ரைம்

5 mins ago

சுற்றுச்சூழல்

41 mins ago

க்ரைம்

45 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்