ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: விளக்கம் கேட்டு மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் விளக்கம் அளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிப்ரவரி 2-ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி அவர்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருத்தது. இந்த மனுவை இன்று (திங்கள் கிழமை) விசாரித்த நீதிபதி ஐ.எஸ்.மேத்தா சிபிஐயின் மனு குறித்து விளக்கமளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்திருந்த மற்றொரு மேல்முறையீட்டு மனுவிலும் மாறன் சகோதரர்கள் விளக்கமளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்