கடலூரில் மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம்: சிறார் நீதிக் குழுமத்துக்கு விசாரணையை மாற்றி ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிற்றை கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்து புதிய விதிகளை வகுக்க ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும், மாணிவிக்கு மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை கடலூர் சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். அந்த சிறப்பு அமர்வில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்